விரல் நுனியில்விற்கிறார் காய்கறி 


அமெரிக்காவில் உள்ளஐடி நிறுவனத்தில்உயர் பதவி வகித்த இளைஞர்இப்போது உள்ளூர் விவசாயிகளோடுகை கோர்த்து லாபகரமாககாய்கறி விற்கிறார்.


“ எதையும் திட்டமிட்டு சரியாக செய்தால் வெற்றி நிச்சயம் “ என உற்சாகமாகப்  பேசத் தொடங்கினார் சென்னயைச் சேர்ந்த இளைஞர் வெங்கட் சுப்ரமணியம். படித்தது ஐடியாக இருந்தாலும் இவருக்குப் பிடித்தது என்னவோ காய்கறி வியாபாரம். “ காய்கறிக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை. எங்கள் பரம்பரையிலும் கூட யாரும் விவசாயிகளோ, காய்கறி விற்றவர்களோ கிடையாது. காய்கறியென்றால் விரும்பிச்  சாப்பிடுவேன். அவ்வளவுதான். ஆனால் இன்று எல்லாமே தலைகீழ். தமிழகம் முழுக்க எந்தெந்தக் காய்கறிகள் எங்கே விளைகின்றன, அவை எங்கே விற்கப் படுகின்றன, எந்த சீசனில் எந்தக் காய்கறிக்கு டிமாண்ட் என எல்லாமே விரல் நுனியில்” எனப் புன்னகைக்கிறார் இந்த கார்ப்பரேட் காய்கறி ஸ்பெஷலிஸ்ட். ஐஐடியில் ஆர்க்கிடெக்ச்சர் படித்து முடித்த வெங்கட் அமொ¢க்காவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் உயர் பதவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென ஒருநாள் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக ஏதாவது செய்ய வேண்டும், அதுவும் •ப்ரஷ்ஷாக இருக்கணும் என சிந்தித்தபோது  உதித்த யோசனையே இந்தக் காய்கறி வியாபாரம். “ நாம எது செஞ்சாலும் அதுல ஒரு பிரச்சினை இருக்கணும், அப்பதான் அதுக்கான தீர்வுகளை நோக்கி நகருவோம். அதுதான் நம்மை உயர்த்தும், செழுமையாக்கும் ஒரே வழி. பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கைலே என்ன கத்துக்க முடியும்? ஐடி நிறுவனங்களில் பணியாற்றும்போது ஒரே மாதிரி பிரச்சினைகள் ஒரே மாதிரி தீர்வுகள் என சலிப்பா இருக்கும். அமொ¢க்காவில் யாரோ ஒரு வெளி நாட்டுக்காரனுக்கு கூலியா இருக்கறதை விட இந்தியாவில் நாமே உழைத்து சம்பாதிக்கலாம், வித்தியாசமாகவும் ஏதாவது செய்யலாம் என அமொ¢க்காவிலிருந்து பெட்டி படுக்கையோடு கிளம்பி விட்டேன். சென்னையில் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மனைவி ஸ்ரீவள்ளியோடு இணைந்து  ‘ இ•பார்ம்’ (e-Farm) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினோம்” என தனது முன்கதைச் சுருக்கத்தை சொன்னார். யாருமே செய்யாத, கவனிக்காத துறையில் கவனம் செலுத்தினால் நிறைய சாதிக்க முடியும் என நம்பும் வெங்கட், அதற்காகவே இந்தக் காய்கறி வியாபாரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுவதைவிட விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்கி விற்றால் என்ன என யோசித்து, முதலில் சிறிய அளவில் இந்த வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறார். தொடக்கத்தில் சில விவசாயிகளைச் சந்தித்து கொஞ்சமாக காய்கறிகளை வாங்கி வந்து, அதை அவர் வீட்டிற்கு அருகிலுள்ள சோ¢யில் வசித்த ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார். பின் அப்பெண்களின் உதவியோடு அவர்களை வைத்தே பொ¢ய வீடுகளுக்கு விற்பனை செய்யத் தொடங்கினார். அதில் கிடைக்கும் லாபத்தினை அந்த ஏழைப் பெண்களோடு பகிர்ந்து கொண்டார்.  இது நல்ல பலன் தரவே மொபைல் காய்கறிக் கடைகளை உருவாக்கியுள்ளார். அதாவது மொத்தமாக காய்கறிகளை ஒரு வேனில் எடுத்துப் போட்டுக்கொண்டு கடற்கரையில் சென்று விற்பது. அதற்கும் நல்ல பலன். “ தினமும் காலைல அஞ்சு மணிக்கே காய்கறியோட போய் கடற்கரையிலே போய் நிப்பேன். அப்பா,அம்மாவுக்கு தர்ம சங்கடமா இருக்கும். ‘ ஐ ஐ டி லாம் படிக்க வச்சோம். இவன் என்ன இப்படியெல்லாம் காய்கறி விக்கறானேன்னு . . .’ ஆனா மனசு முழுக்க  நிறைய நம்பிக்கை இருந்துச்சு. வியசாயியோட மகன் ஐ ஐ டி படிச்சா ஐ ஐ டில படிச்சவங்க காய்கறி விக்கக் கூடாதா என்ன? உண்மையில் அப்படியெல்லாம் நடந்தால் மட்டுமே இந்தியா பொருளாதார அடிப்படைல முன்னேறும். நம் நாட்டு விவசாயம் செழிக்கும் “ என்றார். சென்னை மாதி¡¢யான பொ¢ய  நகரத்தில் ஒவ்வொரு நாளும் காய்கறிகளுக்கான தேவை மிகமிக அதிகம். அதிலும் குறிப்பாக சாலையோர சாப்பாட்டுக்கடை தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை எங்கும் காய்கறிகளுக்கான தேவைகள் மிக அதிகமாகவே இருந்தன. அதைக் கண்டறிந்து அதற்கேற்ப விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து சப்ளை செய்யத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து காய்கறிகளைக் கொண்டு வந்து, அதைத் தரம் பி¡¢த்து உடனுக்குடன் சப்ளை செய்து விடுவார். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவரவர் தேவைக்கேற்ப அவற்றைப் பி¡¢த்துக் கொடுக்கவும் தொடங்கினார். “ இதுதான் நம் விவசாயிகளிடமுள்ள பிரச்சினையே. நல்ல காய் கனிகளை விளைவித்தாலும் அதை யாராவது ஒரு மண்டி ஏஜண்டிடம் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, அப்போதைக்குக் காசு கிடைத்தால் போதும் என நினைத்து விட்டுவிடுவது. சந்தை விலை என்ன? ஒவ்வொரு சீசனிலும் என்ன காய்கறிகளுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது என எதுவுமே தொ¢ந்து வைத்துக் கொள்வதில்லை. தக்காளி நல்ல விலைக்கு விக்குதா, போடு தக்காளியை. கத்தி¡¢க்காய் விலை ஏறுதா, போடு கத்தி¡¢க்காய! என இறங்கி விடுகிறார்கள். இங்கே விலை நிர்ணயம் கூட யார் செய்வதென்று யாருக்குமே தொ¢யாது.  இதைத்தான் நாங்கள் ஒழுங்கு படுத்துகிறோம். அவர்களிடம் வாங்கும் காய்கறிகளின் அன்றைய சந்தை விலைக்கேற்ப விலை கொடுக்கிறோம். காய் கனிகளை சா¢யான முறையில் கையாளப் பயிற்றுவிக்கிறோம். எந்த சீசனில் என்ன காய்கனிகள் லாபம் கொடுக்கும் என்பதை, சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு வலியுறுத்துகிறோம் “ என்னும் இவர் ஒவ்வொரு மாதமும் விவசாயத்தின் மீது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு விவசாயம் குறித்த வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்கிறார். தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்து விட்ட காலத்திலும் நம் இன்னும் விவசாயத்தில் மட்டும் பழங்காலத்து டெக்னிக்குகளையே பயன்படுத்தி வருகிறோம். அதை மாற்ற வேண்டும். இதோ டேடாபேஸ் ஒன்றை உருவாக்கி வருகிறேன். எந்தெந்த ஊர்களில் எவ்வளவு விவசாயிகள் இருக்கின்றனர், அவர்கள் என்ன விளைவிக்கின்றனர், அது வருடத்தின் எந்தக் காலத்தில் கிடைக்கும் முதலான அனைத்து விவரங்களும் அதில் கிடைக்கும்.இது, சென்னை தாஜ் ஹோட்டலில் பப்பாளிக்காய் நூறு கிலோ வேண்டும் எனக் கேட்கும்போது உடனடியாக எந்த விவசாயியிடமிருந்து கிடைக்கும் என்பதைக் கண்டறிய உதவுமில்லையா “ என்கிறார். ஆனால் தற்போது இவருக்கு நிறைய ஆர்டர்கள் குவிந்தாலும் முழுமையாக சப்ளை செய்ய முடியாத நிலையே இருக்கிறது. விவசாயிகளுக்கு என்னதான் நியாயமான விலை கொடுத்தாலும் அவர்களுக்கு இன்னும் அந்த மண்டி வியாபாரத்தைக் கைவிட மனம் வருவதில்லையாம். தமிழ்நாடு விவசாயப் பல்கலை கழகத்தோடு இணைந்து, வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கு காய்கறி சந்தை குறித்தும் அதை எப்படி விற்பது என்பது குறித்தும் வகுப்புகள் நடத்துகிறார். காய்கறி வியாபாரம் செய்ய விரும்பும் மகளிர்  சுய உதவிக் குழுக்களுக்கும் உதவுகிறார். இவை தவிர சில வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை வெட்டியும் தோல் நீக்கியும் தேவைப்படுமாம். அது மாதி¡¢யான வேலைகளுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு ஏழைப் பெண்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பளிக்கிறார். மாம்பழ சீசன் என்றால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாம்பழம் சப்ளை செய்து, அவர்களின் உதவியோடு ஜாம் முதலானவற்றை உற்பத்தி செய்ய வலியுறுத்துகிறார். உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களைப் பெற்று அதை மார்க்கெட்டும் செய்து கொடுக்கிறார்.  “ நம்முடைய வாடிக்கையாளர் யார் என்பதை விவசாயிகள் உணர்ந்தாலே போதும்ங்க. இந்தியாவில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்கிற வாய்ப்பே இருக்காது. இங்கே விவசாயிகள்கிட்டேயிருந்து  கொள்முதல் பண்ணி, அதை சா¢யான வாடிக்கையாளருக்கு விற்கப் படறதை நெறிமுறைப் படுத்தினாலே போதும். பொ¢ய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். படித்தவர்கள் விவசாயத்தைக் கையிலெடுத்தா, இதை விடவும் லாபகரமான தொழில் வேறெதுவும் இருக்க முடியாது என்பதையும் உணர வேண்டும். என்ன, உழைப்பு கொஞ்சம் அதிகமாக தேவைப்படும். அதற்குத் தயாராக இருந்தால் எதிலும் சாதிக்கலாம்” என்றவர், குவிந்து கிடக்கும் இளநீர்க் குவியலில் ஒன்றை தட்டிப் பார்த்து சா¢ பார்த்து, “ நல்லாருக்குப்பா” என லா¡¢யில் ஏற்றுகிறார்.

புதிய தலை முறை

16 ஜூன் 2011

 

 

Photocopies of th published article(Click on the images to get a full screen preview)

1_final

.2211

 


 

 

Making of eFarm - Radio interview

In this radio interview to Rainbow FM (Tamil 101.4 ) , Venkat talks candidly about the challenges , hurdles in starting and running a agri business.

NDTV-Press coverage


Our featured video in NDTV..!

Why I Became A Subjiwallah ?

An article published in the IIT Kharagpur newsletter describes how and why I became a subjiwallah. Read more...

This presentation outlines why we became social entrepreneurs in the agri sector 

Proto Showcase

proto-in-logo-300x206
eFarm Featured in
Proto.in Chennai..